×

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்போரூர் அடுத்த நாவலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள், கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கருப்பு பலூன்களை பறக்க விட்டு கண்டன கோஷமிட்டனர். வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சின்னராஜா தலைமை தாங்கினார். வட்டார தலைவர் அஜய் மோகன்குமார்  முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி விஸ்வநாதன் கலந்து கொண்டார். இதில், காங்கிரஸ் நிர்வாகிகள்  பட்டிபுலம் பன்னீர்செல்வம், சிவராமன், அச்சுதன், துரைசாமி, ஜான்பீட்டர், மல்லை ரமேஷ், நிர்மல்குமார், கருணாகரன், குமரேசன், அசோக், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress , Congress, demonstration
× RELATED மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு