பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து பைக் ஷோரூமில் ரூ.2 லட்சம் கொள்ளை

மதுராந்தகம்: மதுராந்தகம் காவலர் குடியிருப்பு அருகே, பைக் ஷோரூம் செயல்படுகிறது. கடந்த 19ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்ததால், பைக் ஷோரூம் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், ஷோரூம் திறக்கப்பட்டது. ஊழியர்கள், நேற்று காலை ஷோரூமை திறக்க வந்தனர். அப்போது, பின்புறம் உள்ள ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அதிகாலையில் அங்கு வந்த மர்மநபர்கள், அங்குள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>