×

மதுராந்கதம் ஏரிகாத்த ராமர் கோயிலில் இடிந்து விழும் நிலையில் உற்சவ மண்டபம்

மதுராந்தகம்: மதுராந்தம் வெண்காட்டீஸ்வரர் கோயில் அருகே பராமரிப்பின்றி, ஏரிகாத்த ராமர் கோயில் உற்சவ மண்டபம் காணப்படுகிறது. இதனை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் நகர் கடப்பேரியில் வெண்காட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகே மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் கோயில் உற்சவர் மண்டபம் உள்ளது. ஒரு காலத்தில் இந்த மண்டபத்தில் வைத்து ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோருக்கு பல்வேறு பூஜைகள் நடந்தன. காலப்போக்கில் இந்த மண்டபமானது கவனிப்பாரற்று கிடக்கிறது.

இதனால், சுமார் 20அடி உயரத்தில் அமைந்துள்ள, இந்த மண்டபத்தின் மேற்பகுதி மற்றும் சுற்றுப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிதிலமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால், மண்டபம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆப்பதான நிலையில் இருக்கிறது. அந்த பகுதி மக்கள், வெயில் மற்றும் மழை காலங்களில், இந்த மண்டபத்தில் அமர்ந்து இருப்பதை தற்போதும் வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில் மண்டபத்தினை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலைத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளர்.

Tags : Mathurankadam Erikatha Rama Temple ,Mathurankadam Erikkatha Rama Temple , Madurankadam, Erikkatha Rama Temple, Falling Down, Festival Hall
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...