×

வெளிநாடுகளில் வேலையின்றி தவிக்கும் தமிழர்களை அழைத்து வர கோரி மதிமுக ஆர்ப்பாட்டம்

மாமல்லபுரம்: வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வரக்கோரி மாமல்லபுரத்தில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள  அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் பணிபுரியும் இந்திய வம்சாவளி சேர்ந்த தமிழர்கள் கொரோனாவால் வேலை இழந்துள்ளனர். இதனால் உணவு, தங்குமிடம் இன்றி அந்நாடுகளில் அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்கும் வகையிலும் வான் வழிக்கு தடை விதித்துள்ளது.

இதனால், பல நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், வளைகுடா நாடு மற்றும் ஐரோப்பியா நாடுகளில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு வாழ் தமிழர்களை அழைத்து வரக்கோரி  மதிமுக சார்பில், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா தலைமையில் சமூக இடைவெளியுடன் நேற்று மாமல்லபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாமல்லபுரம் அண்ணாநகர் வார்டு செயலாளர் நூரூலக், நிர்வாகிகள் ரமணா, ஆறுமுகம் பாலாஜி, தேசிங்கு, கீர்த்திவர்மன் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,Mathimukha ,Tamils , Foreign, unemployed Tamils, Mathimukha demonstration
× RELATED நாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு...