×

சேலம் அரசு கலைக்கல்லூரி கொரோனா தனிமை முகாமில் பெண் தூக்கிட்டு தற்கொலை

சேலம்: சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 60 வயது பெண்ணின் மகனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பெண், அவரது மகன், 40வயதான தங்கை ஆகியோர் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசுக்கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். முதற்கட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று காலை அங்கிருந்த 40 வயதான பெண்ணை காணவில்லை. பக்கத்து அறையில் பார்த்தபோது, அந்த பெண் ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து அப் பெண்ணின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

Tags : suicide ,Corona ,solitude camp ,Salem Woman ,Salem , Salem, Government Arts College, Corona Lonely, Woman, Suicide
× RELATED பெண் தற்கொலை