×

விமான பயணிகள் 3 பேருக்கு தொற்று

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் கடந்த மே மாதம் 25ம் தேதியிலிருந்து நேற்று வரை 67,903 பயணிகளுக்கு நடத்திய சோதனைகளில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், சர்வதேச முனையத்தில் கடந்த மே மாதம் 9ம் தேதியிலிருந்து நேற்று வரை 11,888 பயணிகளுக்கு சோதனை நடத்தியதில் இதுவரை 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு முனையத்தில் நேற்று 3  பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி செய்யப்பட்டது. சென்னை விமான நிலைய உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இதுவரை 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : passengers , Air passengers, for 3 people, are infected
× RELATED பட்டுக்கோட்டை அருகே சாமி சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது