×

திருவிக நகர் தீட்டி தோட்டம் முதியோர் காப்பகத்தில் 16 பேருக்கு கொரோனா

பெரம்பூர்: திருவிக நகர் தீட்டி தோட்டம் பகுதியில் உள்ள அரசு முதியோர் காப்பகத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவிக நகர் தீட்டி தோட்டம் 4வது தெருவில், மாநகராட்சி சார்பில், நகர்ப்புற வீடு அற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 36 பேர் தங்கியுள்ளனர். குறிப்பாக 60 வயதிலிருந்து 82 வயது வரை உள்ள நபர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து நேற்று இந்த காப்பகத்தில் உள்ள பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 14 பேர் என மொத்தம் 16 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் கொரோனா கேர் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,Thiruvika Nagar Theethi Estate ,persons , Thiruvika Nagar, Thetti Garden, Elderly Archive, 16 people, Corona
× RELATED நீலாங்கரை இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா