×

மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனி வழி அமைக்க வேண்டும்: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனி வழி அமைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் கடந்த 3 மாதமாக கடலுக்குச் செல்லாமல், அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். அத்துடன் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மீன் விற்பனைச் சந்தையும் மூடப்பட்டது. மேலும் பெரிய ரக மோட்டார் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், சிறிய ரக மீன்பிடி படகுகளான வல்லம் உள்ளிட்டவை கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தன. இருப்பினும் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் மீன்பிடிக்கத் தயாராகி வரும் நிலையில், தற்காலிகமாக ஒரு மீன் விற்பனைச் சந்தையை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குட்பட்ட பகுதியில் அரசு அமைத்து வருகிறது. அதில் காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகள் அமைப்பது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையரும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் ஆலோசனையை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்ச ஜெயக்குமார், மீன் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது.

காசிமேடு மீன் மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை. மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனி வழி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மீன் வாங்கும் இடங்களில் சமூக விலகல், சானிடைசர் பயன்படுத்துவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை பத்திரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காசிமேடு, ரெட் ஹில்ஸ், திருச்சிராகுப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் நோய் பரவல் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும். மீன் கடைகள் முன்பு சமூக இடைவெளி கடைபிடிக்க வட்டமிடல் அவசியம். மீன்களை போன்று அழுக கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல இ-பாஸ் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Tags : Jayakumar ,fish market ,Fisheries Minister , Fish Market, Fisheries Minister Jayakumar, Social distancing
× RELATED சரங்கா திட்டம் மேட்டூர் பாசன...