×

சர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது : ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கருத்து

டெல்லி : சர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக செயல்பட்டு வருவதாக ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் Tijjani Muhammad-Bande தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், ஐ.நா.பொதுச் சபையின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா திறம்பட செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட உரிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பம், மக்கள் தொகை, கருத்துகளை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் உலக அரங்கில் இந்தியா மிகவும் முக்கியமான நாடாக திகழ்வதாகவும் பிற சர்வதேச அமைப்புகளிலும் வலுவான உறுப்பினராக இந்தியா பணியாற்றி வருகிறது என்றும் ஐ.நா. பொதுச் சபை தலைவர் Tijjani Muhammad-Bande குறிப்பிட்டுள்ளார்.

காமன் வெல்த், அணிசேரா நாடுகள் அமைப்பு, ஜி 77 போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ள இந்தியா, அந்த நாடுகளுடன் கடைபிடித்து வரும் நல்லுறவை தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : India ,arena ,President ,General Assembly ,country ,UN , International, India, Accountability, UN General Assembly, Chairman, Opinion
× RELATED சர்வதேச அரங்கில் இந்தியா தமது...