×

கோல் இந்தியா, என்எல்சி இணைந்து ரூ.12,000 கோடி முதலீட்டில் 3000 மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தி செய்ய திட்டம்

கொல்கத்தா: கோல் இந்தியா, என்எல்சி இணைந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூவாயிரம் மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. புதிய அனல் மின், சூரிய ஒளி மின் திட்டங்களை நாடு முழுவதும் கூட்டு முயற்சியில் செயல்படுத்தும் வகையில், என்எல்சி, கோல் இந்தியா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன. மத்திய அரசின் நிலக்கரித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்எல்சி இந்தியா நிறுவனமும், கோல் இந்தியா நிறுவனமும் இணைந்து, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின், சூரிய ஒளி மின் சக்தி திட்டங்களை கூட்டு முயற்சியில் செயல்படுத்த உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது.

இதில் இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் அனல் மின்னுற்பத்தித் திட்டமாகும். சூரிய ஒளி மின் திட்டத்தில் மூவாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல்பாடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி சூரிய ஒளி மின்னுற்பத்தி முறையில் இரு நிறுவனங்களும் மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்துக்காக முதலீடு செய்ய உள்ளன.



Tags : Coal India ,NLC , Solar Power, Coal India, NLC
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...