×

நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு: இளநிலை பொறியாளர் உயிரிழப்பு..!!

நெய்வேலி: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இளநிலை பொறியாளர் ஜோதிராமலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று ஒருவரும்,  இன்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்தார்.

இதனையடுத்து விபத்து தொடர்பாக முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.

Tags : Boiler blast accident ,Neyveli NLC ,Junior Engineer ,Boiler explosion , Boiler explosion at Neyveli NLC rises to 12: Junior Engineer dies
× RELATED என்எல்சியில் பரபரப்பு வி.கே.டி சாலை...