×

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு!!

டெல்லி: பான்-ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மேலும் மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. கொரோனா பீதியால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டித்து வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த ஆண்டின் மார்ச் 31 வரையிலும், பின்னர் ஜூன் 31 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்காத நபர்களுக்குக் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. இதுவரை இவற்றை இணைக்காமல் இருப்பவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி இணைக்கலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நீக்கம் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு இணைக்கலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்...ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் Link Aadhaar பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். ஏற்கெனவே உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘Aadhaar Status பிரிவில் தெரிந்துகொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.


Tags : Ban, Number, Aadhaar Number, Duration, Extension, Central Government, Notification
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...