×

லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் படைகளை விலக்கி கொள்ள இந்தியா - சீனா முடிவு என தகவல்

டெல்லி: லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் படைகளை விலக்கி கொள்ள இந்தியாவும் சீனாவும் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் பேசியுள்ளார்.

எல்லைப் பிரச்னைக்கு பரஸ்பரம் அமைதி வழியில் தீர்வு காண்பது தொடர்பாகவும் அஜித் தோவல் - வாங் யி பேசியுள்ளனர். இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லடாக் எல்லையில், கால்வன் பள்ளதாக்கு, பாங்கோங்சோ ஏரி உள்ளிட்ட 5 இடங்களில் இந்தியா - சீன வீரர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலால், மே மாதம் 5ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, கற்களை வீசிக் கொண்டதில் வீரர்கள் காயமடைந்தனர்.

சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் பின்புலங்களில் படைகள் மற்றும் ஆயுதக் குவிப்பு என அசாதாரண சூழ்நிலையும் பதற்றமும் தொடர்ந்து நீடிக்கிறது.



Tags : China ,India ,troops ,territory ,Ladakh India , India, China, Ladakh
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...