×

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பாதிப்பு: குவைத்திலிருந்து 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற திட்டம்

குவைத்: குவைத் அரசு வெளிநாடு வாழ் மக்கள் எண்ணிக்கையை குறைக்கும் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால், அந்நாட்டில் வாழும் இந்தியர்களில் 8 லட்சம் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடான குவைத்தில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வரும் நிலையில் அதில் 12 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றால் ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் நிறுவனங்களும் பெரும் சிக்கலில் இருக்கின்றன.

இந்நிலையில் வெளிநாட்டினர் மக்கள் தொகையை குறைக்கும் வகையில் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு குவைத்தின் தேசிய நடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி குவைத்தில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வகை செய்யும். இந்த மசோதாவின்படி தற்போது குவைத்தில் உள்ள 12 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் தாயகம் திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



Tags : Kuwait Kuwait ,Indians , Kuwait, crude oil, price drop, corona
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...