×

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 1,000 படுக்கைகள் அமைக்க முடிவு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 1,000 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. 1,000 படுக்கைகள் கொண்ட ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மேலும் 1,000 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிகின்றனர். இதுவரை 15,000 பேருக்கு சி.டி.ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை 70,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னையில் மொத்தம் 66,538 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 1,033 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவுக்கு மொத்தம் தற்போது 24,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,837 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரத்தில் 2,416, அண்ணா நகரில் 2,349, தேனாம்பேட்டையில்  2,317, தண்டையார்பேட்டையில் 2,275, அடையாறு 1,913, திரு.வி.க. நகர் 1,858, திருவொற்றியூரில் 1,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : Rajiv Gandhi Hospital ,Chennai Corona , Corona, Chennai
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...