×

ஹைவேவிஸில் ஒரு வாரமாக சாரல் மழை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே கடந்த ஒரு வாரமாக சாரல் பெய்வதால் ஹைவேவிஸ் 7 மலை கிராமங்களில் குளுகுளு சூழ்நிலை நிலவி வருகிறது. சின்னமனூர் அருகே மேற்கு மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்குள்ள மேக மலை, மணலாறு, மகாராஜன் மெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு என 7 மலைக்கி ராமங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு கடந்த ஒரு வாரமாக சாரல்மழை தொடங்கி பெய்து வருகிறது.

அதில் வரும் தண்ணீர் வறண்டு கிடக்கும் மணலாறு மற்றும் வெண்ணியாறு அணை, அருகிலுள்ள நீண்ட ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. தாமதமாக சாரல் சீசன் துவங்க இருப்பதால் இருப்பதால் ஏற்கனவே மேகங்களை உற்பத்தி செய்யும் மேகமலையில் சேர்த்து நல்ல சீதோசன நிலையுடன் குளுகுளு வென ரம்யமான  சூழ்நிலை நிலவுவதால்ல் மலைக் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் நிலையில் குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவும் என்ற தகவலால் சற்று அச்சமும் உள்ளது.

Tags : Haivevis, Rain Shower
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...