×

சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை...: சென்னையில் சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,880க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,853லிருந்து இன்று ரூ.4,841 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 38,824 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 96 ரூபாய் குறைந்து 38,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி  ஒரு கிலோ ரூ.52,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.53.10 ஆக இருந்தது. தொடர்ந்து விலையேற்றம் இருந்து வந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஆறுதலாக விலை குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் பல பகுதிகளில் நகைக்கடை மூடப்பட்டிருந்தும் தங்கம் விலை உயர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , Gold, Silver, Price, Chennai
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு