தமிழகத்தில் பரிசோதனை விகிதம் அதிகம் இல்லை.! நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி டிவிட்

சென்னை: அமைச்சர்கள் கூறுவது போல் தமிழகத்தில் பரிசோதனை விகிதம் அதிகம் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.  10 லட்சம் பேருக்கு 16,663 பேர் என்ற விகிதத்தில் தமிழகத்தில் பரிசோதனை நடைபெறுகிறது . டெல்லியில் தமிழகத்தை விட சுமார் 2 மடங்கு பரிசோதனை நடக்கிறது.  கொரோனா பரிசோதனையில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக டெல்லியில் 10 லட்சம் பேரில் 32,863 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.  ஆத்திரப்பிரதேசம் 10 லட்சம் பேருக்கு 18,597 பேருக்கு பரிசோதனை நடத்து 2 வது இடத்தில் உள்ளது.  நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் டிவிட்டர் தகவலில் உண்மை அம்பலமாகியுள்ளது.

Related Stories: