×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ள சென்னையை, தவிர்த்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. மதுரையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரையில் கொரோனா எண்ணிக்கை  4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதுரையிலும் கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ராதாகிருஷ்னன் ஆய்வு செயதார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும். இந்த மருத்துவமனை அமைவது மிகப்பெரிய மைல்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Radhakrishnan Radhakrishnan ,AIIMS Hospital ,Madurai , Madurai, AIIMS Hospital, Health Secretary Radhakrishnan, Corona
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின்...