×

டெல்லியில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகம்!!

டெல்லி : டெல்லியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் அவர்களது உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்துள்ள சர்தார்ப்பூரில் 10,000 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுடன் டாப் மூலம் வீடியோ காலில் பேசும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்துக் கொள்ள இது பெரும் உதவியாக உள்ளது என்று அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் உதவி மையத்தின் மூலம் நிரந்தரமாக வீடியோ கால் வசதி செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாமல் இது போன்ற புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.முன்னதாக டெல்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் அரசு மருத்துவமனையில் முதன்முதலாக கொரோனா நோயாளிகளுக்கு வீடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

Tags : World ,Delhi ,Largest Corona Treatment Hospital ,Hospital ,Corona Patients ,Video Calling Facility , Delhi, World, Hospital, Corona, Patients, Video, Call, Facility, Intro
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்