×

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!!!

சேலம்:  சேலம் மாவட்டம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதாவது ஒரு நாளுக்கு 100 பேர் அல்லது 150 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இவற்றில் 744 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 788 பேர் தற்போது சேலம் மருத்துவமனை, ஆத்தூர், மேட்டூர் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்டு, அங்குள்ளவர்களை தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர்களது உறவினர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தனியார் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ஒன்பதாம் பாலி கிராமத்தை சேர்ந்த ஒருவர்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவரது உறவினர்களான  மாரியம்மாள் உள்ளிட்ட 3 பேர் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 30ம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நெகட்டிவ் என்று வந்த நிலையில், அரசு அறிவுறுத்தலின்படி, மேலும், 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டில் மாரியம்மாள் என்பவர் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  எதற்காக? அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. ஆனால், அவர் ஏற்கனவே கணவரை பிரிந்து, அவரது சித்தி வீட்டில் வசித்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மற்ற நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem Government Women's College Woman ,Salem State Women's College ,death , Woman hanged herself to death in Salem State Women's College
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...