×

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்பு!: இந்திய கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள் நடவடிக்கை!

சென்னை: சென்னை அருகே படகு கவிழ்ந்ததால் நடுக்கடலில் சிக்கி தவித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு ஒரு தனியார் சரக்கு கப்பல் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சென்னைக்கு கிழக்கே 176 கடல் மைல் தூரத்தில் வீசிய பலத்த காற்றினால் நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. தொடர்ந்து செய்வதறியாது தவித்த 6 இலங்கை மீனவர்கள் படகின் மீது அமர்ந்து பரிதவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் பரிதவிப்பதை கண்ட தனியார் கப்பல் ஊழியர்கள் கடல் சீற்றத்தில் சிக்கி, மீனவர் படகு ஒன்று மூழ்குவதாகவும், அதில் உள்ள மீனவர்களை மீட்க உதவும்படி, விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பலின் கேப்டன், மும்பையில் உள்ள இந்தியக் கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அளித்தார். உடனே அங்கிருந்த அதிகாரிகள் சென்னையில் உள்ள இந்தியக் கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, கடலோர பாதுகாப்புப்படை ரோந்து கப்பல் விரைந்து சென்று 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது. விசாரணையில் 6 மீனவர்களும் இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், மோசமான வானிலையால் திசைமாறி இழுத்து வரப்பட்ட படகு கவிழ்ந்து, 4 நாட்களாக நடுக்கடலில் சிக்கி தவித்ததும் தெரியவந்தது. அவர்களை பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

Tags : Sri Lankan ,fishermen ,Indian , Six Sri Lankan fishermen safely rescued in Indian waters
× RELATED இலங்கை சிறையிலிருந்து...