×

கொரோனா பரிசோதனையில் முறைகேடு: கோவையில் 4 தனியார் ஆய்வகங்களுக்கு தடை...தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!!

கோவையில் 4 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க கோரிக்கை எழுந்தது.
இதன் காரணமாக தற்போது பரிசோதனை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 60 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இவற்றில் 17 தனியார் ஆய்வகங்கள், 43 அரசு ஆய்வகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகங்கள் மூலம் தினந்தோறும் 33 முதல் 35,000 வரை மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்நிலையில் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை நடைபெறுவதில் முறைகேடு நடைபெறுவதாக அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள 4 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதில்  முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆய்வகங்கள் பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக பரிசோதனை செய்து முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற முயற்சித்ததாக பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றதையடுத்து அதன்பேரில்  விசாரணை நடத்தப்பட்டது. இதன்படி, இந்த 4 ஆய்வகங்களுக்கு தடை விதித்து தமிழக சுகாதார திட்ட இயக்குநர் அஜய் யாதவ் உத்தரவிட்டுள்ளார். 4 ஆய்வகங்கள் பரிசோதனை மேற்கொண்டதற்கான கட்டணங்களை விடுவிக்க வேண்டும்  எனவும் உத்தரவிட்டுள்ளார்.


Tags : laboratories ,Coimbatore ,Goa , 4 private laboratories blocked in Goa
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு