×

கொரோனா தொற்று அதிகரிப்பால் தாஜ்மஹால் உள்ளிட்ட பிற ஆக்ரா நினைவுச்சின்னங்கள் தற்போதைக்குத் திறக்கப்படாது என அறிவிப்பு!

ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தாஜ்மஹால் உள்ளிட்ட  பிற ஆக்ரா நினைவுச்சின்னங்கள் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.  

இந்த நிலையில், இந்திய அரசு கடந்த 1ம் தேதியில் இருந்து ஊரடங்குடன் கூடிய அன்லாக்-2-ஐ அறிவித்தது. அப்போது நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் புராதான இடங்கள் வருகிற ஜூலை 6ம் தேதி (இன்று) முதல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும். தாஜ்மஹால் உள்ள தூண்கள் உள்பட எதையும் தொடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் தற்போதைக்குத் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ராவில் உள்ள புராதான இடங்களும் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : monuments ,Agra ,Taj Mahal , Taj Mahal,Monuments,Agra,COVID-19
× RELATED ஆக்ராவின் சுவாரஸ்ய சுயேச்சை; 100வது தேர்தலை நோக்கி ஹனுஸ்ராம் அம்பேத்காரி