×

கோவை அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை

கோவை: கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூணன்(60). இவரின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகியோர் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்று கடந்த 29ம் தேதி கோவை திரும்பினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., உள்பட அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், எம்.எல்.ஏ-வின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ., மற்றும் அவரின் மனைவி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் மனைவி மற்றும் குடுபத்தினருக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


Tags : Coimbatore ,ESI Hospital ,MLA ,AIADMK ,Corona ,Goa , Coimbatore, AIADMK MLA, Corona, ESI Hospital, treatment
× RELATED ‘கோயம்பேடு செயல்பட அனுமதிக்க வேண்டும்’