×

செமஸ்டர் தேர்வுகள் நடத்த சிறப்பு குழு அமைப்பு

சென்னை: பல்கலைக் கழக சிறப்பு தேர்வுகளை நடத்தவும், யுஜிசி வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவும் உயர்கல்வித்துறையின் சார்பில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதியாண்டுத் தேர்வுகள், செமஸ்டர் தேர்வுகள் ஆகியவை நடத்த முடியாமல் நிலுவையில் உள்ளன. இதற்காக சில வழிகாட்டுதல்களை யுஜிசி அறிவித்துள்ளது.

இதை செயல்படுத்தும் முகமாக, தமிழகத்தில் தற்போது ஒரு சிறப்பு குழுவை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது. பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தேர்வு நடத்துவது குறித்து ஆய்வு செய்யவும், தேர்வுகளை எந்த முறையில் நடத்துவது, யுஜிசி வழிகாட்டுதல்களை எப்படி செயல்படுத்துவது என்று ஆராய்ந்து அதற்கான வழிகளை தெரிவிக்கும் வகையில் இந்த சிறப்பு குழு செயல்படும். இந்த குழுவில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைவராக இருப்பார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளர், பாரதிதாசன் பல்கலைக் கழக துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழக துணை வேந்தர், அழகப்பா பல்கலைக் கழக துணை வேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இது  தவிர தொழில் நுட்பக் கல்வித்துறையின் ஆணையர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். யுஜிசியின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையாக கொண்டு தேர்வுகளை நடத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : committee organization ,committee , Semester exams, hold, special team, organization
× RELATED இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர்...