×

கொரோனா தொடர்பாக சென்னையில் 236 சந்தேக மரணங்கள் கண்டுபிடிப்பு

* அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
* விரைவில் மருத்துவ குழு ஆய்வு

சென்னை: சென்னையில் கொரோனாவால் மரணம் அடைந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 236 மரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஜூன் 4ம் தேதி வரை சென்னையில் 66 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 195 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 1003 பேர் மரணம் அடைந்துள்ளனர். குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான மண்டலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகவும், பல மரணங்கள் கணக்கில் காட்டப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான தினகரன் நாளிதழில் தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் கொரோனா மரணங்கள் மற்றும் கொரோனா அறிகுறியுடன் மரணம் அடைந்தவர்கள் தொடர்பாக ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதன்படி பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் வடிவேலன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொரோனா மரணம் தொடர்பாக ஆய்வு செய்தது. அதன்படி ஆய்வு அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 236 மரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்’’ என்றார். சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘236 மரணங்கள் சந்தேக மரணம் மட்டுமே. இதன்பிறகு மருத்துவ நிபுணர் குழு இந்த 236 மரணங்களை ஆய்வு செய்யும். இந்த ஆய்வு முடிவின்படி கொரோனா மரணங்கள் என்று உறுதி செய்யப்பட்டால் அதுதொடர்பான பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்றார்.

* 6 மரணங்கள் சேர்ப்பு
ஏற்கனவே 13ம் மற்றும் 17ம் தேதி வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை அறிக்கையில், சென்னை மாவட்ட இறப்பு அறிவிப்பில் Reconciled figures என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஜூன் 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில்
ஏப். 28, 31ம் தேதி மற்றும் மே 2, 3, 5, 7 ஆகிய தேதிகளில் இறந்தவரின் மரணங்கள் சேர்க்கப்பட்டு இருந்தது.

Tags : Chennai ,deaths , In connection with Corona, Madras, 236 suspected deaths, discovery
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...