×

தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தன

சென்னை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரிய நிறுவனத்திடம் போடப்பட்ட  ஒப்பந்தப்படி ஆர்டர் செய்யப்பட்ட 15 லட்சம் பிசிஆர் கருவிகள் முழுவதும்  கடந்த வாரம் வந்தடைந்தது. இதையடுத்து கூடுதலாக 10 லட்சம் கருவிகள் வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. 7 லட்சம் கருவிகள் தென் கொரியாவில் இருந்தும், ஒரு லட்சம் கருவிகள் ஜெர்மனியிலிருந்தும், அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் கருவிகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம்  கருவிகளும் இதன் மூலம் வாங்கப்படுகிறது. முதற்கட்டமாக 1 லட்சம் பிசிஆர் கருவிகள் நேற்று தமிழகம் வந்தது. அடுத்த 3 வாரத்தில்  ஆர்டர் செய்யப்பட்ட மொத்த பிசிஆர் கருவிகளும் தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் மொத்தம் 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, 1 lakh, PCR tools
× RELATED பழைய உணவு முறைக்கு மாறு..! தமிழர்...