×

ராஜஸ்தானில் பல்கலை. தேர்வுகள் அனைத்தும் ரத்து: எல்லா மாணவர்களும் தேர்ச்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா நோய் தொற்று பரவுதல் அச்சம் காரணமாக மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில்  இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை ரத்து செய்வது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுகின்றனர். அடுத்த சில நாட்களில் கல்வி துறை அமைச்சகம் வழங்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : University , In Rajasthan, Univ. Exams, all cancellations, all student, mastery
× RELATED சென்னை பல்கலை இணைப்புக் கல்லூரிகளில்...