குழியில் விழுந்து சிறுவன் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன் (38). இவருக்கு, வனிதா என்ற மனைவியும், திலீப்குமார்(12), ருதீஸ்குமார்(3) என்ற இரு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மேகநாதன் தன் நிலத்தில், மாஞ்செடிகள் வைக்க குழி தோண்டி, அதில் குச்சி நட்டு வந்துள்ளார். அப்போது, ருதீஸ்குமார் குழியில் விழுந்துள்ளான். ஏற்கனவே, அப்பகுதியில் பெய்த மழையில் குழியில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சிறுவன் நீரில் மூழ்கினான். அவனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories:

More
>