×

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கீழ்ஓடை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன் விவசாயி. இவரது மகன் தமிழரசு (15) சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர். ஊரடங்கு உத்தரவால் தனது அப்பாவிற்கு உதவியாக விவசாய வேலை பார்த்தும் கால்நடைகள் மேய்த்தும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்களுக்கு சொந்தமான வயல்வெளியில் உள்ள பம்புசெட்டில் மெயின் சுவிட்சை ஆப் செய்யுமாறு தந்தை செல்லப்பன்  தமிழரசுவிடம் கூறியுள்ளார். உடனே மெயின் சுவிட்சை ஆப் செய்ய முயன்ற தமிழரசு மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தமிழரசுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Electricity, flowing, boy kills
× RELATED மின்கட்டணம் செலுத்துவதில் மாற்றம்