×

மன அழுத்தத்தை போக்க போலீசுக்கு யோகா பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்க 3 நாள் யோகா பயிற்சி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார். சாத்தான்குளத்தில் போலீசாரால் தந்தை மகன் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளும் போலீசாரால் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே, போலீசாருக்கு பொது மக்களுடன் பழகும் முறைகள் மற்றும் அவர்களின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுந்தது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்க மூன்று நாட்கள் யோகா பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த யோகா பயிற்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் கலந்துகொண்டனர்.


Tags : Stress, for cops, yoga practice
× RELATED விவேகானந்தா பள்ளியில் போலீசாருக்கு யோகா பயிற்சி