×

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையின் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வைரஸ் நோய் தொற்றை குறைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மைக்ரோ திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வீடாக கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து பரிசோதித்து அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க  தொடர் கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

 செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மதுராந்தகம், தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருக்கும் செவிலியர் பற்றாக்குறையை நிறைவேற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நேரடியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தற்போது இருக்கும் செவிலியர்கள் பற்றாக்குறை முழுமையாக நிவர்த்தி செய்யப்படும். கொரோனா தொற்றுக்கு மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கபடாததால் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார். பேட்டியின் போது செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், டீன் சாந்திமலர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Radhakrishnan ,Chengalpattu ,Kanchipuram , Chengalpattu, Kanchipuram, Corona, control, focus
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...