×

ஹைட்ராக்சி மருந்தால் பலன் இல்லை: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

பெர்லின்: கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில் நோயாளிகளுக்கு, மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த பலனை தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ உலகம் முழுவதும் பிரபலமானது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூட ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு தர பரிந்துரைத்தது.இதற்கிடையே இரு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை செய்தது. இதன் இடைக்கால ஆய்வு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை மேற்கொண்டதில், இறப்பு விகிதம் குறையவில்லை அல்லது லேசான முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. எனவே, ஹைட்ராக்சி குளோரோகுயின், லோபினாவிர் மருந்துகள் மீதான பரிசோதனையை கைவிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags : announcement ,World Health Organization , Hydroxylamine, no effect, World Health Organization
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...