×

திண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது வேதாத்திரி நகர். இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மீது பாலம் அமைப்பதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஒப்பந்தம் விடப்பட்டு, பாலம் கட்டும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர் கழிவுநீர் கால்வாயை அடைத்து வேதாதிரி நகர் செல்லும் சாலைகளை உடைத்து கழிவுநீரை மாற்றுப் பாதையில் செலுத்தினர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாலம் வேலை முடிவடைந்தது. ஆனால் தற்போது வரை கழிவுநீர் கால்வாயில் இருந்த அடைப்பை தற்போது வரை எடுக்காததால் இப்பகுதியின் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடக்க முடியாமலும், துர்நாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலையும் உள்ளது. அதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் அடைப்பை எடுத்துவிட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : road ,Dindigul , Drainage, sewerage, people suffering
× RELATED கும்மிடிப்பூண்டி - ரெட்டம்பேடு...