×

ஒட்டன்சத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய நீர்தேக்கத்தொட்டி அகற்றம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நீர்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லெக்கையன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சாலைபுதூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பொதுமக்கள் கூடும் இடமான கலையரங்கம் முன் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வராமல் பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இது சம்பந்தமாக இவ்வூர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் நீர்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் புதிதாக அமைத்துத் தருமாறு கூறினர்.

அதன் பிறகு நீர் தேக்கத்தொட்டியின் நான்கு தூண்களை இடித்து, தொட்டி மட்டும் பூமியில் விழுந்தவாறு இருந்தது. இந்த தொட்டியானது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி மாணவர்கள் விளையாடும் இடமாகவும் இருப்பதாலும், கோயில்கள் இருப்பதாலும் உடனடியாக இடிக்கப்பட்ட நீர் தேக்கத்தொட்டியால் உயிர் பலி ஏற்படும் முன் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள்் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் பேரில் தரைமட்டமாகி பூமியில் புதைந்திருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நேற்று ஜேசிபி வாகனம் மூலம் ஊராட்சி நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி அப்புறப்படுத்தியது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.



Tags : civilians , Ottomanship, reservoir, disposal
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...