×

அரசு ஊழியர்களுக்காக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்

நெல்லை: தினகரன் செய்தி எதிரொலியாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு  கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் உள் மாவட்ட அளவிலும், பயணிகள் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் நெல்லை, தென்காசி, திருச்செந்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி, நாகர்கோவில் பாபநாசம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மார்க்கத்தில் ஏற்கனவே 2 அரசு பஸ்கள் அரசு ஊழியர்களுக்கு இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் கடந்த 1ம் தேதி முதல் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த பஸ்சில் சென்று திரும்பும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். பெண் ஊழியர்கள் நின்றுகொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இத்ததைய சமூக விலகல் இல்லாத பயணத்தால் கொரோனா பரவும் அச்சத்திற்கு ஆளான  அரசு ஊழியர்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். இதையடுத்து நேற்று (ஜூலை 4) முதல் 2 அரசு பஸ்கள் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. காலை 8 மணிக்கும், 8.20 மணிக்கும்  என அடுத்தடுத்து இரு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதேபோல் மறுமார்க்கத்தில் மாலைவேளையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை திரும்ப 2 அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த வழித்தட பஸ்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Government ,servant ,Thiruchendur ,Paddy , Government servant, Paddy, Thiruchendur, additional government buses
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்