×

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!: ஒரு வீரர் படுகாயம்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். தெற்கு காஷ்மீரில் புல்வாமா அருகே துணை ராணுவத்தினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ராணுவ வாகன தொகுப்பு கடந்த பிறகே குண்டு வெடித்தது. மரத்தின் அடியில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்க செய்ததில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சக்தி குறைந்த வெடிகுண்டு என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்புப்படையினர் சக்தி வாய்ந்த மேலும் ஒரு வெடிகுண்டை கண்டெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் அங்கு பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். குறைந்த தீவிரம் கொண்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பு என்பதால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. ஒருவருக்கு கையில் காயமுற்றுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : soldier ,Terrorists ,security forces ,Pulwama , Pulwama, security force, terrorists, attack
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்...