×

செங்கல்பட்டு அருகே உல்லாச விடுதியான காவல் நிலையம்?: பாலூர் காவல்நிலையத்தில் காவலர்கள் குடித்துவிட்டு உற்சாகம்!!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல்நிலையத்தில் காவலர்கள் இரவு நேரத்தில் குடித்துவிட்டு பெண்களுடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாலூர் காவல்நிலையம், அங்குள்ள காவலர் குடியிருப்புக்கு மத்தியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் போலீசார் இரவுநேர பணிக்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிடுவதாக தெரிகிறது. குறிப்பிட்ட இரண்டு காவலர்கள் மட்டும் இரவு பணியில் அமர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

அவர்களோ காவல்நிலையத்தில் ஆள் இல்லாததை சாதகமாக்கிக் கொண்டு மது அருந்திவிட்டு பெண்களை வரவழைப்பதாக புகார் எழுந்துள்ளது. நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் வருவதும், அதிகாலையில் அவர் திரும்பி சென்று விடுவதும் தொடர்வதாக காவலர் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அந்த பெண்ணை மடக்கி பிடித்து, யார் நீ, இங்கு எல்லாம் வரக்கூடாது என குடியிருப்பு வாசிகள் கண்டித்துள்ளனர்.

தொடர்ந்து, காவல் நிலையத்தில் உள்ள வழக்கு மற்றும் குற்றப்பிரிவு ஆவணங்களுக்கு இடையே ஏராளமான காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் மகத்துவமான பணியை மேற்கொள்ளும் காவலர்களே இத்தகைய தவறுகளில் ஈடுபடுவது அதிர்ச்சியடைய வைக்கிறது.

Tags : police station ,Leisure police station ,Chengalpattu ,Palur ,Chengalpattu Station ,Holiday Bungalow , Chengalpattu, Leisure, Police Station, Palur, Guards
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்