×

குளுகுளு கொடைக்கானலில் கிரீன் ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு ஏற்ற சூழல்: மலைவாழ் விவசாயிகளுக்கு அழைப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் கிரீன் ஆப்பிள் சாகுபடி செய்வதற்கான தட்பவெப்ப நிலை தற்போது நிலவுகிறது. விவசாயிகள் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என தோட்டக்கலைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், குளிர் பிரதேசமாக இருப்பதனால் பேரி, பிளம்ஸ், பிச்சீஸ், கிவி போன்ற பல வகையான பழ வகைகள் இங்கு விளைகின்றன. அதில் குறிப்பாக, குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய கிரீன் ஆப்பிள் தற்போது கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விளைந்துள்ளது. கொடைக்கானலில் விளையும் இவ்வகை கிரீன் ஆப்பிள் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மிகுந்தது. அத்துடன் அதிக மாவு சத்துக் கொண்டதாகவும் உள்ளது.

கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முத்துவேல் கூறுகையில், ``மலைவாழ் விவசாயிகள் கிரீன் ஆப்பிள் நாற்றுகளை வாங்கி விவசாயம் செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஒரு மரத்திற்கு 250 முதல் 300 பழங்கள் விளையக்கூடும். கொடைக்கானலில் கிரீன் ஆப்பிள் விவசாயம் செய்வதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழல் நிலவுகிறது. எனவே, ஆப்பிள் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். அதற்கு தேவையான நாற்றுக்கள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் உள்ளது. இந்த ஆப்பிள் நாற்றுக்களை எவ்வாறு நடவு செய்ய வேண்டும் என்றும் எவ்வாறு பராமரிப்பது, நோய் தாக்காமல் பாதுகாப்பது உள்ளிட்ட வழிமுறைகளை மலைவாழ் விவசாயிகளுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் தெளிவாக எடுத்துரைக்க தயாராக உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

Tags : mountain farmers ,Kulukulu Kodaikanal ,hill farmers , Kodaikanal, Green Apple, Cultivated
× RELATED வள்ளுவரும் சுற்றுச் சூழலும்...