×

ஊரடங்கால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் மீட்டு கொண்டு வா!: சென்னையில் வைகோ தலைமையில் போராட்டம்

சென்னை: ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டி ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  ஊரடங்கால் வளைகுடா மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழக அரசு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கட்சி தொண்டர்கள் 10 நபர்களுடன் சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டார். வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களை மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல பல ஆண்டுகால பாடுபட்டு உழைத்து, இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த பொருளாளர்களை இந்த நெருக்கடி காலத்தில் கட்டணமின்றி அழைத்து வர வேண்டும். தமிழகத்தில் அவர்களை தனிமைப்படுத்தும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அயல்நாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி மதிமுக பொதுசெயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மேலும் வளைகுடா நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

 கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் சிக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய அரசுக்கு இது தொடர்பான கோரிக்கையும் மதிமுக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கேரள மாநிலம் அவர்கள் மாநிலத்தை சேர்ந்த மக்களை மீட்பதற்கு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசும் வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



Tags : homeland ,Tamils ,Vaiko ,Chennai , Vaiko's leadership in Chennai to bring back homeless Tamils
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...