×

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாக தகவல்

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் பின்னணியை கூறி ஸ்ரீதர் அதிகாரம் செலுத்தியதால் சிறைத்துறை காவலர்கள் திணறி வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சிறைத்துறையே காரணம் என ஸ்ரீதர் கூறியதால் வார்டன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஸ்ரீதரை சமாதனப்படுத்தியும் ஏற்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தான் அடைக்கப்பட்டு இருந்த சிறை கதவை மூட எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதர் ரகளை செய்ததாக கூறுகின்றனர்.


Tags : Sattankulam ,Madurai ,jail , Sattankulam murder ,case,5 cops transferred, Madurai jail
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட போலீசாருக்கு வரவேற்பு