×

புன்னப்பாக்கம் குளத்தை ஆக்கிரமித்து விவசாயம்: அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி குளத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி மனு கொடுத்தார்.
அந்த மனுவின் விவரம்: திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம் ஊராட்சியில், 6 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலங்களில் குளத்தில் சேகரிக்கப்படும் நீரினால், நிலத்தடிநீர் உயர்ந்து, இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை இன்றி இருந்தனர்.

இந்நிலையில், குளத்தின் அருகே உள்ள விவசாயிகள் சிலர், குளத்தை ஆக்கிரமிப்பு செய்து, விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் குளமானது சுருங்கி தற்போது குட்டையாக மாறிவிட்டது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் சேமிக்க முடியாமல் வீணாகி வருவதோடு, நிலத்தடிநீர் குறையும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



Tags : pond ,removal ,Collector , Punnappakkam Pond, Agriculture, Collector
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...