×

சவரத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை

திருவள்ளூர்: கொரோனா ஊரடங்கால், சவர தொழிலாளர்களுக்கும், 2000 நிவாரணம் வழங்குவதாக, அரசு அறிவித்தது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா நிவாரணத் தொகையாக, 2000 வழங்குதாக முதல்வர் அறிவித்ததால், வி.ஏ.ஓ., ஆர்.ஐ மற்றும் தாசில்தார் மூலம் அனைத்து சவரத் தொழிலாளர்களும் உறுப்பினர் விபரம், வங்கி கணக்கு, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை வழங்கி ஒரு மாதமாகிறது. இதுவரை நிவாரணத் தொகை வழங்கவில்லை. கொரோனா ஊரடங்கில் பல்வேறு கெடுபிடியால், தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல், வருமானத்தை இழந்துள்ளோம். எனவே, நிவாரணத் தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Shaving workers, relief
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்