×

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

ஆவடி:  ஆவடி அடுத்த மோரை, புதிய கன்னியம்மன் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடம் ஊரடங்கு உத்தரவால் கடந்த 3 மாதமாக மூடப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளியின் அலுவலக அறை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் பசுபதிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்.

அப்போது, அலுவலக அறையில் இருந்த கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்டப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பள்ளியில் புகுந்து பொருட்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து தலைமையாசிரியர் பசுபதி, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : government school ,Computer school , Computer, theft in government school
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...