×

சக ஊழியர்கள் மதிக்கவில்லை என தாசில்தாருக்கு வாட்ஸ்அப்பில் பதிவிட்டு பெண் விஏஓ தற்கொலை முயற்சி: புதுகை அருகே பரபரப்பு

புதுக்கோட்டை: புதுகை அருகே பெண் விஏஓ, சக ஊழியர்கள் தன்னை மதிக்கவில்லை என தாசில்தாருக்கு வாட்ஸ்அப்பில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விஏஓவாக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி(40). இவர், ஆலங்குடி தாசில்தார் கலைமணிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், உடன் பணியாற்றி வரும் சகஊழியர்கள் நான் சொல்வதை கேட்பது இல்லை. அவர்கள் என்னை மதிக்காததால் நான் தற்கொலை செய்து  கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவை படித்து பார்த்த தாசில்தார் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து கலைச்செல்வி வீட்டிற்கு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காலை சென்று பார்த்த போது அங்கு கலைச்செல்வி மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் மாத்திரை கிடந்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.இதையடுத்து கலைச்செல்வியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை கலைச்செல்வி வீடு திரும்பினார்.

Tags : Colleagues, Daslidar, WhatsApp, female VAO, suicide attempt, update
× RELATED பெண் தற்கொலை