×

புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

புதுச்சேரி:  புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பத்தில் கடந்த 2ம் தேதி வழுதாவூர் முரளிதரன் (19), கொடாத்தூர் சந்துரு (23) ஆகியோர் 10க்கும் மேற்பட்டவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பைக் எரிப்பு முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது அம்பலமானது.  இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படையினர், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 4 பேர் பிடிபட்டுள்ளனர். இந்த நிலையில், ரவுடிகள் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்சி சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 அதில், எதிராளி அருண் மீது வெடிகுண்டு வீசிய நிலையில், அவர் தப்பி ஊருக்குள் புகுந்ததால் ரவுடிகள் முரளிதரனும், சந்துருவும் கத்தியுடன் ஊருக்குள் பட்டப்பகலில் தேடி அலைகின்றனர். முரளிதரன் 2 கையிலும் கத்தியுடன், சந்துரு ஒரு கையில் தடியுடனும் உலா வருகின்றனர்.  இந்த வீடியோவை கைப்பற்றிய வில்லியனூர் போலீசார், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று வழுதாவூரில் நடந்த முரளிதரனின் இறுதி ஊர்வலத்தில் ஊடரங்கு தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


Tags : Puducherry Pillaiyakaruppam ,murder ,Puducherry , Puducherry, Pillaiyarkuppam, Murder, 2 Rowdies
× RELATED காணொலியில் கொரோனா சிகிச்சை மாநாடு:...