×

சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் 5 லட்சம் நிதி

சென்னை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். கொடூரமான இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிறகு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

Tags : Sarathkumar ,Rs , Sathankulam, merchants, Sarathkumar
× RELATED போலி செல்போன் எண் சரத்குமார் போலீசில் புகார்