×

மாதம் 3000 உதவித்தொகை பெற இளம் வக்கீல்களுக்கான தகுதி என்ன? தமிழ்நாடு பார்கவுன்சில் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்த 3000 உதவித்தொகையை இளம் வக்கீல்கள் பெறுவதற்கான தகுதியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில்  அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இளம் வக்கீல்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம்  3000 உதவித்தொகை வழங்கப்
படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதி மற்றும் விண்ணப்பித்தல் குறித்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நேற்று கூறியதாவது: முதல்வரின் அறிவிப்புக்கு, பார்கவுன்சில் சார்பிலும்  வக்கீல்கள் சமுதாயத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த உதவித்தொகையை பெற இளம் வக்கீல்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு  சட்ட கல்லூரியில் சட்டம் படித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பார்கவுன்சிலில் பதிவு செய்து 3 வருடங்களுக்குள் இருக்க வேண்டும்.  தமிழ்நாட்டை  பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து வக்கீல் தொழிலில்  இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு வக்கீல் மட்டுமே உதவி தொகை பெற முடியும். இந்த தகுதியுடன் இருக்கும் இளம் வக்கீல்கள் நாளை  (ஜூலை 6ம் தேதி) முதல்  விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் பார்கவுன்சில் வெப்சைட்டில் பதிவிடப்படும் என்றார்.

Tags : lawyers ,Tamil Nadu Park Council Announcement , 3000 Monthly Scholarship, Young Advocate, Tamil Nadu Park Council
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...