×

காவல் நிலையத்தில் எஸ்ஐ திட்டியதால் விஷம் குடித்த விவசாயி

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). விவசாயி. பாண்டியன் குடும்பத்தினருக்கும், அதே  பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலைய எஸ்எஸ்ஐ கலியமூர்த்தி, இருதரப்பையும்  நேற்றுமுன்தினம் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது பாண்டியனை எல்லோர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக  கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த பாண்டியன் வயலுக்கு சென்று விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு, சிதம்பரம் ராஜாமுத்தையா  மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.


Tags : police station , Police station, SI, poison, farmer
× RELATED கள்ளக்குறிச்சி அருகே நெடுமானூரில்...